சீரியல் நடிகர்கள் தாமதமாக வருகிறார்கள், புலம்பும் இயக்குனர்- அந்த பிரபலம் இவர்தானா?
விஜய் தொலைக்காட்சியில் சில ஹிட் சீரியல்கள் உள்ளது. அதில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, நம்ம வீட்டு பொண்ணு என 3 சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
இந்த 3 தொடரையும் குலோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், சீரியல் நடிகர்கள் எல்லாம் தொடருக்கு மிகவும் லேட்டாக வருகிறார்கள், இதனால் படப்பிடிப்பு செய்ய தாமதமாகிறது என பிரவீன் பென்னட் கூறியிருந்தார்.
உடனே ரசிகர்கள் நடிகை ஆல்யா மானசா தான் கர்ப்பமாக இருப்பதால் தாமதமாக வருகிறார் என கமெண்ட் செய்து வந்தனர்.
நடிகை ஆல்யாவின் கணவரும் நடிகருமான சஞ்சீவ் ரசிகர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஆல்யா எப்போதும் சரியான நேரத்திற்கு வந்திடுவார் என பதிவு போட்டுள்ளார்.