பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேறும் நடிகர்கள்! இயக்குனர் சோகமாக போட்டிருக்கும் பதிவு
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. டிஆர்பியில் விஜய் டிவியில் இருந்து டாப் 5 லிஸ்டில் இடம் பிடிக்கும் ஒரே தொடர் இதுதான் என்று கூட சொல்லலாம். பாரதி கண்ணம்மாவில் இருந்து நடிகர்கள் வெளியேறுவதும், அவருக்கு பதில் இவர் என சொல்லி வேறு நடிகர்களை கொண்டு வருவதும் சமீப காலமாக அதிகம் நடந்துவருகிறது.
முதலில் அகிலன் வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் சுகேஷ் ராஜேந்திரன் அகிலன் ரோலில் நடிக்க தொடங்கினார். அதன் பின் கண்ணம்மா ரோஷ்ணி ஹரிப்ரியன் திடீரென வெளியேறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அதனால் அவருக்கு பதில் வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து அஞ்சலி ரோலில் நடித்து வந்த ஸ்வீட்டி தற்போது வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் யார் நடிப்பது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர்கள் தொடர்ந்து வெளியேறுவது பற்றி இயக்குனர் பிரவீன் பெனட் இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்து இருக்கிறார்.
"Replacement.. ஐயோ ஐயோ.. என்னத்த சொல்றது! எத்தனை.. ஷப்பா" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.