வெளியேறும் முன் கதறிய பிரவீன் ராஜ்.. இறுதியில் பிக் பாஸே சொன்ன வார்த்தை
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இன்றைய எபிசோடில் பிரவீன் ராஜ் எலிமினேட் ஆனார்.
அவர் பெயரை விஜய் சேதுபதி கார்டில் காட்டியதும் எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். அவர் உடனே எழுந்து சென்று முன்பே எழுந்து சென்று கதறி கதறி அழ தொடங்கிவிட்டார்.
அவர் தனக்கு வாழ்க்கையில் குரு என யாரும் இல்லை, இங்கு வந்த பிறகு பிக் பாஸ் தான் காட் பாதர் என நினைத்ததாக பிரவீன் கூறினார். மேலும் போட்டியாளர்கள் ஒவ்வொரு பெயராக கூறி அட்வைஸ் கூறினார். கனி அக்கா தான் தனக்கு அம்மா போல சோறு போட்டதாக அவர் கூற, கனியும் கண்ணீர் விட்டுவிட்டார்.

கண்ணீருடன் வெளியேறிய பிரவீன்
அவர் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தது மற்ற போட்டியாளர்கள் பலரையும் கண்கலங்கவைத்துவிட்டது.
அதன் பின் பேசிய பிக் பாஸ், பிரவீன் சிறந்த போட்டியாளர் என்றும், பிரவீன் முன்பு சொன்னது போல தான் அவரது காட் பாதர் ஆக இருப்பேன் என்றும் கூறினார்.
வெளியில் வந்த பிரவீன் விஜய் சேதுபதியிடம் பேசும்போது அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என சொல்கிறார். அதுவும் ஒருநாள் நடக்கும் என விஜய் சேதுபதியும் கூற, பிரவீன் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri