6 நாட்களில் ரிலீசாகும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித்தின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படமும் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீ புக்கிங் வசூல்
இப்படம் வெளிவர இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri