விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல் வேட்டை.. இதுவரை எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
பெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வருகிற 6ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி படம், தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 900+ திரையரங்கங்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது.