Predator badlands திரை விமர்சனம்
பிரிடேட்டர் இந்த படத்துக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய பேன் பாலோயிங் உள்ளது, அர்னால்ட் தொடங்கி தற்போது வரை பல வெர்சனில் பிரிடேட்டர் வர தற்போது டான் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த பிரிடேட்டர் பேட்லாண்ட் எப்படியுள்ளது? பார்ப்போம்..

கதைக்களம்
பிரிட்டேட்டர்-யை அது உலகில் யாட்ஜுவா என்று அழைக்கின்றனர். இதில் அண்ணன், தம்பி யாட்ஜுவா இருக்க, இருவருக்கும் சண்டையுடன் படம் தொடங்குகிறது.
யாட்ஜுவா என்றால் பலவீனமே இருக்க கூடாது, கருணையே இல்லாமல் வேட்டையாட வேண்டும் என்பதை பாலோ செய்ய வேண்டும்.

ஆனால், தம்பி யாட்ஜுவா கொஞ்சம் பலவீன்மாக இருக்க, சொந்த அப்பாவே அதை கொல்ல சொல்கிறார், அதை செய்ய மறுக்க அண்ணனை, அப்பா யாட்ஜுவா கொல்ல், தம்பி யாட்ஜுவா டெக் என்ற பிரிடேட்டர் வேறு கிரகத்திற்கு சென்று காலிஸ் என்ற கொடூர மிருகத்தை வேட்டையாடி தன்னை நிரூபிக்க செல்கிறது.
சென்ற இடத்தில் அங்கு ஏற்கனவே மனிதர்களால் அனுப்பப்பட்ட சிந்தடிக் ரோபோக்கள் இருக்க காலிஸை கொன்றுது யார் என்பதை மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
பிரிட்டேட்டர் படம் என்றாலே அது வேட்டையாட நம் ஊருக்கு வரும், இங்கிருக்கும் ஹீரோ அதை தடுப்பார்கள், ஆனால், இதில் ஹீரோவே பிரிடேட்டர் தான், அதற்கு ஒரு கொடூர மிருக்கத்தை வில்லனாக்கி அதை கொல்லும்படி ஒரு கதை உருவாக்கியுள்ளார் டான்.

டெக் செல்லும் கிரகத்தின் பெயர் கென்னா, ஹாலிவுட் படங்கள் என்றாலே பிரமாண்டம், சிஜி தான் அது இதில் பஞ்சமே இல்லை. கென்னா கிரகத்தில் ட்ராகன், யானை போல் இருக்கும் எருது, ஒரு குறும்பு குரங்கு அதோடு கொடூர வில்லன் காலிஸ் என்று பிரமாண்டத்தின் உச்சத்தை தொட்டுள்ளனர்.
அதிலும் பைசனுடன் நடக்கும் சண்டை எட்ஜ் ஆப் தி சீட் தான், மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை ஒரு சிந்தடிக் ரோபோக்கள் மூலம் காட்டியுள்ளனர்.

மிருகங்களே தேவலாம் இவர்கள் மருத்துவ தேவைக்கு அவற்றை எல்லாம் என்ன செய்கிறார்கள் அதில் சிக்கும் டெக் பிரிடேட்டர் அதில் இருந்து தியா என்ற சிந்தடிக் என்ற ரோபோ மனிதாபிமான ரோபோவாக மாறி உதவுவது என பல காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
ஆனால் இந்த படம் முழுவதுமே மிருங்கள் ரோபோக்கள் இதை சுற்றி நடப்பது பெரிய எமோஷ்னல் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் சண்டைக்காட்சிகளுக் பிரமாண்டங்ககுமே நிரம்பியுள்ளது.

க்ளாப்ஸ்
சிஜி காட்சிகள்.
சண்டை காட்சிகள்.
பல்ப்ஸ்
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க கூடிய காட்சிகள்.
மொத்தத்தில் இந்த பிரிடேட்டர் பேட்லாண்ட் ஆக்ஷன் பட ஹாலிவுட் ரசிகர்களுக்கு செம விருந்து.