கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா ஆடுவது.. ப்ரணிதா டான்ஸ் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கும் நடிகை ப்ரணிதா கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
கர்ப்பம்
சமீபத்தில் தான் பிரணிதா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
தனது கணவர் பிறந்தநாளுக்கு கிடைத்த பெரிய கிப்ட் இது என்றும் ப்ரணிதா கூறி இருந்தார். மூன்று மாதம் முடிந்தபிறகு தான் கர்பமாக இருப்பதை வெளியில் சொல்ல வேண்டும் என கணவர் குடும்பத்தினர் சொன்னதால் இதை தாமதமாக அறிவிப்பதாகவும் ப்ரணிதா கூறி இருந்தார்.
டான்ஸ் வீடியோ
இந்நிலையில் தற்போது ப்ரணிதா டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்.
கர்பமாக இருக்கும் போது இப்படியா வேகமாக டான்ஸ் ஆடுவது என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.