கவினை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் ஜோடியாகும் ப்ரீத்தி முகுந்தன்.. முதல் முறையாக இணையும் ஜோடி
ப்ரீத்தி முகுந்தன்
கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.
படத்தை தாண்டி இவர் நடித்த ஆச கூட பாடல் வீடியோ இணையத்தில் படுவைரலானது. இதன்பின் தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்திலும் இவர் தான் கதாநாயகி.
அசோக் செல்வனுடன் ப்ரீத்தி
கவினுடன் ஸ்டார் படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் முக்கிய ஹீரோவான அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார் ப்ரீத்தி முகுந்தன். அறிமுக இயக்குநர் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.