நடிகர் விஜயகாந்த் இப்படி ஆனதற்கு காரணமே அந்த விஷயம் தான்- ஓபனாக கூறிய பிரேமலதா
நடிகர் விஜயகாந்த்
கோலிவுட் சினிமாவில் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகர் விஜயகாந்த்.
நடிகராக தான் நடிக்க படங்கள் பலவற்றிலும் நாட்டி மீது அவர் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதை காட்டியுள்ளார்.
மாஸ் வசனங்கள், சரியான புள்ளி விவரங்கள், அதிரடி ஆக்ஷன் என சினிமாவில் கலக்கி கேப்டனாக வலம் வந்த இவர் அரசியலிலும் கால் பதித்தார்.
கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு அந்தஸ்து பெற்றார், ஆனால் அவருக்கு உடல்நலக் குறைவு திடீரென ஏற்பட அப்படியே வீட்டில் முடங்கினார்.
காரணம் என்ன
விஜயகாந்திற்கு அண்மையில் உடல்நலம் மோசமாக போக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீண்டநாள் சிகிச்சைக்கு பிறகு தற்போது வீட்டிற்கு வந்த அவர் தேமுதிக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.அதில் அவரை பார்த்த தொண்டர்கள், ரசிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரேமலதா பேசும்போது, 2011ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பல துரோகங்கள், அதன் பிறகு நடந்தவை விஜயகாந்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.
அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது உடல் நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணம் என கூறியுள்ளார்.