பிரேமலு 2 இந்த பண்டிகைக்கு வெளியாகிறதா.. புது அப்டேட் இதோ
பிரேமலு
சமீப காலமாக மலையாள சினிமா படங்கள் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் தமிழ் ரசிகர் பலரால் விரும்பப்பட்ட திரைப்படம் பிரேமலு.
வெறும் ரூ. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென், சங்கீத் பிரதாப் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படம் ஆஹா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ளது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, படக்குழுவினர் பிரேமலு படத்தின் இரண்டாம் பகுதி குறித்து அறிவித்தனர்.
புது அப்டேட்
இந்த நிலையில், தற்போது இந்த படம் குறித்து ஒரு புது தகவல் வெளியானது. அதாவது பிரேமலு இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கும் எனவும், ஷூட்டிங் முடிந்து இந்த படம் ஓணம் பண்டிகை அன்று வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், இது தொடர்பான படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
