தலைவா சிம்பு வெங்கட் பிரபு அட்ரஸ் அனுப்பவா: அட்ராசிட்டி செய்யும் பிரேம்ஜி
சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த பட இயக்குனர் சிவா வீட்டுக்கு சென்று அவருக்கு ஒரு தங்க செயின் பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் மீண்டும் ஒரு படத்திற்கு கூட்டணி சேர்கிறார்களா என கேள்வி எழுப்பி வந்தனர்.
மறுபுறம் பிரேம்ஜி நடிகர் சிம்புவை டேக் செய்து வெங்கட் பிரபு அட்ரஸ் அனுப்பவா என கேட்டிருக்கிறார். "My dear thalaiva @SilambarasanTR_ shall I send my brother @vp_offl house address ?" என ட்விட் செய்து இருக்கிறார் பிரேம்ஜி.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் ஈட்டி இருக்கும் நிலையில் பிரேம்ஜி இப்படி பதிவிட்டு இருக்கிறார்.
My dear thalaiva @SilambarasanTR_ shall I send my brother @vp_offl house address ? ?????? pic.twitter.com/JuKAFgumMG
— PREMGI (@Premgiamaren) December 10, 2021