பிரேம்ஜி - இந்து திருமணம் முடிந்தது.. குவியும் வாழ்த்துக்கள்
பிரேம்ஜி
திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரேம்ஜி. நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடகராகவும் வலம் வந்தார்.
45 வயதாகும் இவருக்கு எப்போது தான் திருமணம் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரேம்ஜிக்கு திருமணம் நிச்சையாக்கப்பட்டது. ஆனால், மணமகள் யார் என்று தெரியவில்லை.
திருமணம்
நேற்று திருமண வரவேற்பு விழாவில் பிரேம்ஜியின் மனைவி இந்துவின் புகைப்படம் வெளிவந்தது. இந்த நிலையில், இன்று காலை முருகன் கோவிலில் பிரேம்ஜி - இந்து திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். பிரேம்ஜிக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
