20 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்யப்போகும் பிரேம்ஜி.. யார் அந்த கல்யாண பொண்ணு தெரியுமா
பிரேம்ஜி திருமணம்
தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிள் நட்சத்திரமாக இருந்து வந்தவர் பிரேம்ஜி. இவருக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தபோதிலும் மௌனம்காத்து வந்தார்.
ஆனால், நேற்று திடீரென இந்த வருடம் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அதிரடியாக ஒரு அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் பிரேம்ஜி வெளியிட்டார்.
இதை உண்மையாகவே இவர் கூறுகிறாரா? அல்லது படத்தின் ப்ரோமோஷனா என பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், இது உண்மையான செய்தி தானாம்.
20 வயது வித்தியாசம்
இந்த ஆண்டு பிரேம்ஜி தனது காதலியை திருமணம் செய்யபோகிறாராம். பிரேம்ஜிக்கும் அவருடைய காதலிக்கும் கிட்டதட்ட 20 வயது வித்தியாசம் என தெரியவந்துள்ளது.
44 வயதாகும் பிரேம்ஜி 24 வயதாகும் பெண் ஒருவரை தான் காதலித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. எது எப்படியோ பிரேம்ஜிக்கு திருமண வாழ்த்துக்கள்.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
