நல்ல விஷயத்திற்காக ஒன்றினையும் பல நட்சத்திரங்கள்
ஒரு நல்ல விஷயத்திற்காக பல நட்சத்திரங்கள் ஒன்றினைந்துள்ளனர், அது என்னவென்று நீங்களே பாருங்க..
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சங்க நிதி திரட்டுவதற்காக தனி இசைப்பாடல் எண்ணம் போல் வாழ்க்கை என்ற பெயரில் வெளியாகிறது.
இதில் ரகுமான் இசைப்பள்ளி மாணவர் எட்வின் லூயிஸ் இசையில்,சாண்டி நடனம் அமைக்க, தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப் எடிட் செய்ய, பத்திரிகையாளர் கவிதா பாடல் எழுதி இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரிக்கார்டு இந்த பாடலை வெளியிடுகிறது .தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக 20 திரைநட்சத்திரங்கள் சசிகுமார் ஆர்யா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், கீர்த்தி சுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது