D55 பூஜைக்காக நடிகர் தனுஷ் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?
நடிகர் தனுஷ்
அமரன் பட வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். தற்காலிகமாக இப்படத்திற்கு D55 என பெயரிட்டுள்ளனர்.
தனுஷுடன் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ், ஆர்.டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பூஜை கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது.

வாட்ச் விலை
இந்த பட பூஜையில் வழக்கம் போல் தனுஷ் வேட்டை சட்டையில் மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.
அந்த பூஜையின் போது தனுஷ் கட்டியிருந்த வாட்சின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாட்ச் படேக் பிலிப் க்யூபிட்ஸ் ரக வாட்ச், இதில் 18 கேரட் ரோஸ் கோல்டு, ஸ்கிராட்சஸ் வராத அளவுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை பயன்படுத்தி வாட்ச் செய்துள்ளார்களாம்.

இந்த வாட்ச் விலை தற்போதைய மார்க்கெட் விலைப்படி ரூ. 90 லட்சம் என கூறப்படுகிறது.