சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்.. எத்தனை கோடிக்கு தெரியுமா
பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் பிரின்ஸ். அனுதிப் இயக்கியுள்ள இப்படத்தில் Maria Ryaboshapka என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த பிம்பிளிக்கி பிளாப்பி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
டாக்டர், டான் படங்களை தொடர்ந்து அடுத்ததாக எஸ்.கே நடிப்பில் வெளியாகவுள்ள இப்படமும் சூப்பர்ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை
இந்நிலையில், பிரின்ஸ் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமையை டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரூ. 42 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri