10 நாள் முடிவில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் செய்த மொத்த வசூல்- முழு விவரம்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
அனூதீப் இயக்கத்தில் சிவகார்ததிகேயன் நடிக்க கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்ரைன் நாட்டு நாயகி மரியா என்பவர் நடித்திருந்தார்.
தமன் அவர்கள் இப்படத்திற்கு சூப்பரான இசையை அமைக்க படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி இருந்தது.
தமிழை போல சிவகார்த்திகேயன் தெலுங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தை பற்றி பேசியிருந்தார், அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் வைரலாகி இருந்தது.
மொத்த வசூல்
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. ரிலீஸ் ஆகி 10 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இப்போதும் படம் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
Mr & Mrs சின்னத்திரை Finalist யார் யார்?- ஜெயிக்கப்போவது யாரு

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
