அதிரடி வசூல் வேட்டை நடத்தியது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்- 5 நாளில் எவ்வளவு தெரியுமா?
பிரின்ஸ் திரைப்படம்
அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைன் நாட்டு நாயகி மரியா என்பவர் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்கள். சத்யராஜ் அவர்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் பணிபுரியும் பிரிட்டிஷ் ஆசிரியர் மீது காதலில் விழுகிறார். இவர்களை சுற்றியே இந்த கதை ஜாலியாகவும், கொஞ்சம் சென்டிமென்ட்டாகவும் நகர்கிறது.
தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது.
5 நாள் வசூல்
இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள நிலையில் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. விமர்சனங்கள் நன்றாக வந்துள்ள நிலையில் வரும் நாட்களிலும் வசூல் அமோகமாக வரும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
