நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா..
அமீரக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.
இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் முக்கிய பிரமுகர்களுக்கு அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், மோகன்லால், மம்முட்டி, தயாரிப்பாளர் போனி கபூர், ஆகியோருக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி யுள்ளது.
தற்போது பிரபல மலையாள நடிகர்களான பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.