ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. யார் தெரியுமா..
ராஜமௌலி
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என பல பிரமாண்ட திரைப்படங்கள் இந்திய சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
குறிப்பாக பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்த்தது. மேலும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் ஆக்ஸர் விருதையும் வென்றது.
அடுத்ததாக ராஜமௌலி இயக்கவிருக்கும் திரைப்படத்தில் மகேஷ் பாபு தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரித்விராஜ்
இந்த நிலையில், இப்படத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும் என சொல்லப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
