நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு விரைவில் அவரது காதலருடன் திருமணம்.. எப்போது தெரியுமா?
ப்ரியா பவானி ஷங்கர்
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி மக்களால் அறியப்பட்டவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
பின் விஜய் டிவி பக்கம் வந்து கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன்பின் நடிப்பு பக்கம் வரப்போவதில்லை என்பவர் முழுநேரம் நடிப்பதை மட்டுமே இப்போது தொழிலாக வைத்துள்ளார்.
மேயாத மான் படத்தில் தொடங்கிய அவரது சினிமா பயணம் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், யானை, ஓ மணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து படங்கள் நடிக்கிறார்.
கைவசம் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் உள்ள நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வெளியாகி இருந்தது.
திருமணம்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ப்ரியா பவானி ஷங்கரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. அதற்கு அவர், பண்ணனும், உண்மையில் திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் தான்.
அடுத்தாண்டு 2025ல் திருமணம் செய்துகொள்ள பிளான் செய்துள்ளதாகவும் அதை முதல்முறையாக இப்போதுதான் நான் கூறுகிறேன் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிரியா பவானி ஷங்கர் ராஜ் என்பவரை காதலித்து வருகிறார், அவருடன் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் Manithan
