சினிமாவால் திருமணம் செய்யாமல் போன பிரியா பவானி ஷங்கர்.. அவர் வாழ்க்கையில் நடந்த திருப்பம்
நடிகை பிரியா பவானி ஷங்கர்
'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இதன்பின், ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது இவர் கைவசம் பத்து தல, திருச்சிற்றம்பலம், யானை, பொம்மை, ருத்ரன், அகிலன் என பல படங்கள் உள்ளன.
திருமணம்
இந்நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகலாம் என முதலில் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிட்டதால், தற்போது சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருபதாகவும் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan