நான் அப்படி சொல்லவே இல்லை.. சொன்னாலும் என்ன தப்பு: ப்ரியா பவானி ஷங்கர் கோபமான ட்வீட்
ப்ரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வளர்ந்து இருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.
இவர், உலகநாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2, எஸ் ஜே சூர்யாவின் பொம்மை, மற்றும் சிம்பு, ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ப்ரியா பவானி சங்கர், "நான் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன்" என்று கூறியதாக தகவல் பரவியது. இதனால் பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்தனர்.
பதிலடி
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்," மாப்பிள்ளை சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம் போன்று மீடியாக்கள் நடந்து கொள்கிறார்கள். நான் சொன்னதாக பரவும் செய்தி பொய்யானவை. நான் அப்படி சொல்லவே இல்லை, அப்படியே சொல்லி இருந்தாலும் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.
எல்லா நடிகர்களும் பணத்திற்காக தானே நடிக்கிறார்கள். எல்லோரும் பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள். அதை ஒரு நடிகர் சொன்னால் மட்டும் ஏன் மோசமாக பேசுறீங்க" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
?? https://t.co/1qM68L8xBc pic.twitter.com/3Xu6wNvnQd
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 19, 2023
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எல்லாம் பொய்..உண்மையை போட்டு உடைத்த ஹெச் வினோத்