காதலனை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்.. திருமணத்தில் எடுத்த வீடியோ இதோ

By Karthick Raja Nov 11, 2026 06:27 AM GMT
Report

Priya Bhavani Shankar got married: நடிகை பிரியா பவானி சங்கர் இன்று தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, ரெஜினா வாங்கிய சம்பளம்

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா, ரெஜினா வாங்கிய சம்பளம்

நடிகை பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கியவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இருமுடி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்.. திருமணத்தில் எடுத்த வீடியோ இதோ | Priya Bhavani Shankar Got Married

காதல் திருமணம்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் சேர்ந்து அவ்வப்போது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அப்போதெல்லாம், நடிகை பிரியா பவானி சங்கரிடம் ரசிகர்கள் கேட்பது ஒரே கேள்விதான், 'எப்போது திருமணம்?' என்று.

காதலனை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்.. திருமணத்தில் எடுத்த வீடியோ இதோ | Priya Bhavani Shankar Got Married

இந்த நிலையில், இன்று நடிகை பிரியா பவானி சங்கர் - ராஜ்வேல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US