பிக்பாஸ் 5வது சீசனில் வரப்போகும் ரசிகர்களின் லேட்டஸ்ட் Crush நாயகி- யார் தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசன் படு மாஸாக ஓளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் அதிகரிப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று கமல்ஹாசன் இடம்பெற்ற நிகழ்ச்சியில் எலிமினேஷன் எல்லாம் நடந்தது. முதல் போட்டியாளராக வீட்டைவிட்டு வெளியேறினார் நாடியா. இன்று காலை வந்த புரொமோவில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் நடந்தது.
யார் யார் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர் என்பது அடுத்த புரொமோவில் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது பிக்பாஸ் 5வது சீசன் குறித்து என்ன தகவல் என்றால் தான் நடித்துள்ள ஓ மன பெண்ணே படத்தின் புரொமோஷனுக்காக பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் 5வது சீசன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அவருடன் ஹரிஷ் கல்யாண் கலந்துகொள்ள இருக்கிறாரா என்ற தகவல் சரியாக தெரியவில்லை.