ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக மாடர்ன் லுக்கில் போட்டோ ஷுட் நடத்திய பிரியா பவானி ஷங்கர்- கலக்கல் போட்டோ
பிரியா பவானி ஷங்கர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகை. சின்னத்திரையில் வந்து இப்போது வெள்ளித்திரையில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.
செய்தி வாசிப்பாளர் டூ நாயகி
பிரபல செய்தி தொலைக்காட்சியில் வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் நாயகியாக வலம் வந்தார். அமித் நாயகனாக நடிக்க விஜய்யில் ஒளிபரப்பானது, தொடரும் மிகப்பெரிய ஹிட்.
இதில் நடித்ததும் அடுத்து படங்கள் நடிப்பீர்களா என கேட்டபோது சினிமா பக்கம் வர மாட்டேன், தான் வெளிநாடு செல்கிறேன் என்றார், ஆனால் மீண்டும் சினிமா பக்கம் தான் வந்தார்.

பிரியாவின் திரைப்பயணம்
மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய பிரியா அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கசட தபற, ஓ மணப்பெண்ணே என நடித்தார். இப்படங்களை தொடர்ந்து பிரியா நடித்து முடித்துள்ள ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் லிஸ்டில் உள்ளன. அவை விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்டோ ஷுட்
அழகிய மிகவும் வித்தியாசமான போட்டோ ஷுட் அதிகம் நடத்திய பிரியா இப்போது ஒரு புது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

பிரம்மாண்ட படைப்பான RRR படத்தின் தமிழகத்தில் முதல் நாள் இவ்வளவு வசூலா?