டாப் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் பிரியா பவானி சங்கர்.. 35 நாட்களில் இத்தனை படங்களா!
சின்னத்திரை நடிகையாக ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளவர் தான் பிரியா பவானி சங்கர்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம, திருச்சிற்றம்பலம் என நான்கு படங்கள் வெளியானது.

லைன் அப்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படத்தில் பிரியா பவானி நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் சேர்ந்து பிரியா பவானி நடித்துள்ள பத்துதல திரைப்படம் மார்ச் 30-ல் வெளியாகிறது.
மேலும் இவர், நடிகர் ராகவலாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வரும் 35 நாட்களில் பிரியா பவானி நடித்திருக்கும் 3 படங்கள் வெளியாக இருக்கிறது. இது மட்டுமின்றி இந்தியன் 2, பொம்மை, டிமான்டி காலனி 2 போன்ற படங்களையும் லைன் அப் வைத்துள்ளார்.

ஷிவானி நாராயணனுக்கு திருமணமா? போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்