திருமணமா, புது வீடா? பிரியா பவானி ஷங்கர் காதலருடன் நெருக்கமான போட்டோவால் குழப்பம்
பிரியா பவானி ஷங்கர்
நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் ஏற்கனவே ராஜவேல் என்பவரை நீண்டகாலமாக காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர்.
புது வீடா, திருமணமா?
தற்போது பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் காதலர் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். மேலும் அவர் எழுதிய வரிகளை பார்க்கும்போது அவர்களுக்கு திருமணம் என்று தான் ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் அதன் பின் அந்த வரிகளை மாற்றிய அவர் தங்கள் புது வீடு பற்றி தான் குறிப்பிட்டதாக கூறி இருக்கிறார். ஏற்கனவே பிரியா பவானி ஷங்கர் கடற்கரை ஓரமாக ஒரு வீடு கட்டி வருவதாக செய்தி வந்த நிலையில், அந்த வீட்டுக்கு தான் குடிசென்றிருக்கிறார்கள்.
கனவு நிறைவேறிவிட்டதாக பிரியா அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
வெற்றிமாறனின் விடுதலை ஷூட்டிங்கில் விபத்து! ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. அதிர்ச்சியில் சினிமா துறையினர்