பணத்திற்காக தான் நடிக்க வந்தேன்- நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார்.
இதையடுத்து 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மாபியா, ஓ மணப்பெண்ணே, மான்ஸ்டர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் அகிலன், இந்தியன் 2, ருத்ரன், பத்து தல போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

ஓபன் டாக்
இந்நிலையில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் கலந்துள்ளார்.
அதில் அவர், " தமிழில் நடிக்க வந்த போது என்னுடைய எதிர்காலம் குறித்து பெரிய திட்டம் எதுவும் தீட்டவில்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றெல்லாம் கவலை படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதனால் தான் நடிக்க வந்தேன்" என்று கூறியுள்ளார்.

மிஸ்கின் வாய்யை அடித்து கொளப்பிய விஜய்.. முகம் எல்லாம் ரத்தம்