என்ன சிம்ரன் இதெல்லாம்.. பிரியா பவானிஷங்கர் போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
நடிகை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் 'நீங்களுமா இப்படி இறங்கிட்டீங்க' என கேட்டு வருகின்றனர்.
பிரியா பவானி
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக, சீரியல் நடிகையாக இருந்து, சினிமாவில் நுழைந்தவர்.
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்து இருக்கிறார்.

இப்படி ஒரு போட்டோவா?
வழக்கமாக திரையில் மிக ஹோம்லியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் தற்போது சமீப காலமாக சற்று ட்ரெண்டியாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.
தற்போது அவர் ட்ரெண்டியான உடையில் வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'என்ன சிம்ரன் இதெல்லாம்.. நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க' என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.



