அவர் படம்னா எதையும் கேட்க மாட்டேன்.. யாரை சொல்கிறார் பிரியா பவானி ஷங்கர்?
பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையானவர். தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் அவர் பொம்மை படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில், ராதா மோகன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் அந்த படம் நாளை ஜூன் 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கனும்
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பிரியா பவானி ஷங்கர் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறி இருக்கிறார். வெற்றிமாறன் என்றால் கதை கூட கேட்காமல் நடிக்க ரெடி என கூறி இருக்கிறார்.
மேலும் மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழைத்தாலும் கதை கேட்காமல் கூட நடிப்பேன் என கூறி இருக்கிறார்.

சுந்தரி சீரியல் நடிகையா இது.. போட்டோ பார்த்து ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்