ரீஎன்ட்ரிக்கு தயார், ஆனால் அந்த ஷோவில் தான் வருவேன்.. கண்டிஷன் போடும் ப்ரியா மஞ்சுநாத்
மானாட மயிலாட ஷோவில் டான்சராக அதிகம் பாப்புலர் ஆனவர் பிரியா மஞ்சுநாத். அதற்கு பிறகு அவர் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். பல ரியாலிட்டி ஷோக்களில் அவரை ரசிகர்கள் பார்த்திருக்கலாம்.
ஒருகட்டத்தில் அவர் திருமணம் செய்துகொண்டு சின்னத்திரைக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார். தற்போது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா மஞ்சுநாத் அவ்வப்போது தனது குழந்தைகள் போட்டோவை வெளியிட்டு வருகிறார்.
மேலும் ரசிகர்ளுடன் அவர் உரையாடியபோது பல கேள்விகளை நெட்சங்கள் கேட்டிருக்கின்றனர். அவர் எப்போது ரீ என்ட்ரி கொடுக்கப்போகிறார் என்பது தான் அதில் முக்கிய கேள்வி.
தற்போதைக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் ஐடியா இல்லை என கூறிய அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ வாய்ப்பு வந்தால் மட்டும் நிச்சயம் கலந்துகொள்வேன் என தெரிவித்து இருக்கிறார்.