அஜித் எப்படிப்பட்டவர் தெரியுமா.. உருக்கமாக பதிவிட்ட நடிகை பிரியா வாரியர்!
அஜித்துடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி நடிகை பிரியா வாரியார் instagramல் பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது
இதை நீண்ட காலமாக சொல்ல காத்திருந்தேன். உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது.முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள்.
Cruise கப்பலில் பயணித்த போது நாம் ஒன்றாக சாப்பிட்ட உணவு, அடித்த ஜோக்குகள், அது மேலும் சிறந்த நேரம். உங்களை போல ஒருவரை நான் பார்த்தது இல்லை. கார், குடும்பம், பயணம் செய்வது, ரேசிங் போன்ற விஷயங்களை பற்றி பேசும்போது உங்கள் கண்கள் மாறும் விதம் அப்படி இருக்கும்.
உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பார்த்து கவனித்து அவர்களை பாராட்டுவீர்கள். உங்களது பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு தான் என்னை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. இதை இன்னும் ஆண்டாண்டுகளுக்கும் நான் எடுத்துச் செல்வேன்.
எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்களை பார்த்து கற்றுக் கொண்டேன். அஜித் சார் உங்களுடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அனுபவத்தை நான் எப்போதும் மறக்க மாட்டேன். உங்களுடன் நடிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
இப்படிக்கு உங்களது தீவிர ரசிகை என பிரியா வாரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
