விவாகரத்து பெற்ற சீரியல் பிரபலங்கள் மறுபடியும் சேர்ந்து வாழ்கிறார்களா?- வெளிவந்த தகவல்
படங்களில் ஜோடியாக நடிக்கும் சில பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
அப்படி மக்களால் ரசிக்கப்பட்ட நிறைய ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி நேசம் புதுசு என்ற படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் ரஞ்சித்-ப்ரியா ராமன்.
இருவரும் 15 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இருவரும் வெவ்வேறு தொலைக்காட்சியில் சீரியல்கள் நடித்து வருகிறார்கள்.
அண்மையில் இருவரும் ரசிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தார்கள், அதுவே வைரலானது.
இந்த நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை போட்டு திருமண வாழ்த்து கூறிக் கொண்டுள்ளனர்.
இதனால் இருவரும் விவாகரத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துவிட்டார்களோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்தும் கூறி வருகின்றனர்.