தன்னை பற்றி பரவும் செய்தி.. நடிகை பிரியா வாரியர் கோபமான பதிலடி
ஒரே ஒரு கண்ணடிக்கும் வீடியோ வைரல் ஆனதால் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இருப்பினும் படங்களில் அவருக்கு தொடர்நது பெரிய ரோல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சின்ன சின்ன ரோல்களில் தான் தற்போது நடித்து வருகிறார்.
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் அவர் ஒரு பாடலில் கிளாமர் ஆக ஆடி வைரல் ஆகி இருந்தார். அதன் பின் சர்வம் மாயா படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தார்.

கோபமான பதிவு
ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து இருந்த பரம்சுந்தரி என்ற ஹிந்தி படத்தில் பிரியா வாரியர் ஒரு காட்சியில் மட்டும் இருப்பது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அவரை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், background என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.
அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஒரு நாள் மட்டுமே தான் கலந்துகொண்டதாகவும், ஆனால் தன் ரோல் சொன்னபடி இல்லை என கூறி அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறி இருக்கிறார். அவர் நடிக்க வரவில்லை என்றால், முதல் நாளில் அவர் நடித்ததை படத்தில் பயன்படுத்துவோம் என படக்குழு நடிகையை மிரட்டியதாகவும் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் பற்றி மிக கோபமாக பிரியா வாரியர் பதிவிட்டு இருக்கிறார். Clicks பெறுவதற்காக மோசமாக செய்கிறார்கள் என குறிப்பிட்டு அவர் தாக்கி இருக்கிறார்.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri