தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. மீண்டும் மேடையில் பிரியா வாரியர் ஆடிய டான்ஸ்! வீடியோ இதோ
பிரியா வாரியர் சில வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு கண்ணடிக்கும் வீடியோ மூலமாக இந்திய அளவில் பிரபலம் ஆனவர்.
தற்போது அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் வைரல் ஆகி இருக்கிறார்.
இன்று ஹைதராபாத்தில் குட் பேட் அக்லீ வெற்றிவிழா நடைபெற்றது. அதில் இயக்குனர் ஆதிக், பிரியா வாரியர், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
டான்ஸ்
மேடையில் பேசிய பிரியா வாரியர் தான் மீண்டும் வைரல் ஆகிவிட்டதாக மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். மேலும் அவர் இயக்குனர் ஆதிக்கிற்கு நன்றி கூறி இருக்கிறார்.
"நீங்கள் என்னிடம் முதலில் சொல்லும்போதே.. வாங்க வெகேஷன் போல சென்று fun செய்துவிட்டு வரலாம் என கூறினீர்கள். ஷூட்டிங்கில் எனக்கு அப்படி தான் நிஜமாகவே இருந்தது" என பிரியா வாரியர் கூறியுள்ளார்.
மேலும் அதே விழாவில் பிரியா வாரியர் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவும் வைரல் ஆகி இருக்கிறது.

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

எடப்பாடியை முதல்வர் ஆக்குவதெல்லாம் பாஜக நோக்கமல்ல; இதுதான் ரகசியம் - முன்னாள் அமைச்சர் தாக்கு IBC Tamilnadu
