ஏமாற்றிய அட்லீ.. வருத்தத்தில் இருக்கும் நடிகை பிரியாமணி! காரணம் இதுதான்
நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படம் மூலமாக அறிமுகமானவர். இந்த படத்திற்கு பிறகு மிகப்பெரிய புகழ் கிடைத்தது.
இருப்பினும் தமிழ் சினிமாவில் அவர் ஒரு சில படங்களே நடித்தார். தற்போது அவர் சின்னத்திரை ஷோக்களில் ஜட்ஜ் ஆக பங்கேற்று வருகிறார். மேலும் படங்களில் குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால் அதில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அட்லீ மீது வருத்தம்
ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் அட்லி எப்போதும் பிரியாமணியை கிண்டல் செய்து கொண்டே தான் இருப்பாராம். அவரை 'புலி மணி' என்று தான் அழைப்பாராம். அந்த விஷயத்தை சமீபத்திய பேட்டிகள் பிரியாமணி கூறியிருக்கிறார்.
சென்னையில் ஷூட்டிங் நடந்தபோது எங்களை வீட்டிற்கு அழைத்து அட்லீ விருந்து கொடுத்திருந்தார். ஜவான் படத்தில் நடித்த வட இந்திய பெண்களுக்கு தென்னிந்திய உணவு புதிதாக இருந்தது.
மேலும் ஜவான் படத்தில் நடிகர் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருந்ததாகவும், அவருடன் தனக்கு ஒரு காட்சி இருக்கும் என்று அட்லி கூறி இருந்தாராம்.
ஆனால் அந்த காட்சி எடுக்கப்படவில்லை என அட்லி மீது தனக்கு ஒரே ஒரு வருத்தம் இருப்பதாக பிரியாமணி கூறியிருக்கிறார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
