என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா, மத வேறுபாடு.. திருமணம் பற்றிய விமர்சனத்திற்கு பிரியாமணி
பிரியாமணி
முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பிரியாமணி.
பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் அதிக படங்கள் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். சமீபகாலமாக ஹிந்தியிலும் நடித்து வருகிறார் பிரியாமணி.
தற்போது இவர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
திருமணம்
கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் பிரியாமணி நிறைய விமர்சனங்களை எதிர்க்கொண்டுள்ளார்.
ஜிஹாத், முஸ்லீம், உங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என கமெண்ட் வந்தன. மத வேறுபாடின்றி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன், இதை சுற்றி ஏன் இவ்வளவு வெறுப்பு உள்ளது என புரியவில்லை.
சமீபத்தில் ஈத் பண்டிகைக்கு பதிவு போட்டேன், நீங்கள் இஸ்லாத்திற்கு மாறிவிட்டீர்கள் என பதிவிட்டார்.
நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும், இது என் முடிவு.
திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் நான் மதம் மாறமாட்டேன், நான் இந்துவாக பிறந்தேன், எப்போதும் என் நம்பிக்கையை பின்பற்றுவேன் என்று கூறியிருக்கிறேன் என சமீபத்தில் தனது திருமணம் பற்றி வரும் விமர்சனங்களுக்கு பிரியாமணி பேசியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
