அதுக்கு கூட காசு கொடுக்கணுமா.. ஷாக் ஆன நடிகை பிரியாமணி
நடிகை பிரியாமணி பருத்திவீரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் பிரியாமணி. அதில் அவர் நடித்த முத்தழகு ரோலுக்காக தேசிய விருதும் கிடைத்தது.
தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக அவர் இருந்து வருகிறார். கடந்த வருடம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜவான் படத்திலும் அவர் ஒரு ரோலில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் தெலுங்கில் Bhamakalapam என்ற படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி இருந்தது.
பணம் கொடுக்கணுமா
இந்நிலையில் ப்ரியாமணி சமீபத்தில் அளித்த பேட்டியில் paparazzi கலாச்சாரம் பாலிவுட்டில் இருப்பதை பற்றி கூறி இருக்கிறார்.
நடிகர் நடிகைகள் ஏர்போர்ட், ஜிம், ஹோட்டல் என செல்லும்போது பத்ரிக்கையாளர்கள் அவர்களை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். ஆனால் அது தற்செயலாக நடப்பது இல்லை.
அதற்காக அந்த பத்ரிக்கையாளர்களுக்கு பணம் தரப்படுகிறது. அதை பற்றி கேட்டு ஆச்சர்யம் அடைந்தேன் என பிரியாமணி கூறி இருக்கிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
