கேரவன் கூட இல்ல.. ஒரு மாதம் அப்படி செய்தார்! பருத்திவீரன் ஷூட்டிங்கில் நடிகை பிரியாமணி பட்ட கஷ்டம்
சில மாதங்களுக்கு முன்பு பருத்திவீரன் படம் பற்றி ஒரு பெரிய சர்ச்சை கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் அமீர் இடையேயான பிரச்சனை தான் அதற்கு காரணம்.
அமீர் பற்றி ஞானவேல் பேட்டியில் ஏளனமாக பேசிய விஷயங்கள் சர்ச்சை ஆகி, அதற்கு சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். அதன் பின் ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
பிரியாமணி பேட்டி
இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை பிரியாமணி பேட்டி அளித்திருக்கிறார். அதில் தான் அந்த படத்தில் நடிக்கும் போது கேரவன் கூட இல்லை, அம்பாசிடர் காரில் தான் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருந்தது என கூறி இருக்கிறார்.
மாலை 5.30 மணிக்கு இரண்டு ஷாட் எடுக்க அழைப்பார் இயக்குனர். ஒரு மாதம் அப்படி நடந்தது. கிராமத்தில் பழகுவதற்காக இப்படி செய்திருக்கிறார்.
ஒரு நாள் சீனை ஷூட்டிங் சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை என்றால் மறுநாள் அதே நேரத்திற்கு லைட் வரும்போது மீண்டும் அந்த காட்சியை எடுப்பார் அமீர்.
அந்த காட்சிகளை தற்போது பார்க்கும்போது பட்ட கஷ்டம் எல்லாம் வீண்போகவில்லை என தோன்றும். அமீர் சாருக்கு அதற்காக நன்றி என பிரியாமணி கூறி இருக்கிறார்.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
