பிக் பாஸுக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கருக்கு வந்த பிரியங்கா.. யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 106நாட்களை கடந்து இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தொகுப்பாளினி பிரியங்கா.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, எப்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில், 'திரும்ப வந்துட்டேனு சொல்லு' என்று மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.
சூப்பர் சிங்கர் ஜூனியர் படப்பிடிப்பில் இருந்து பின்னணி பாடகி பிரியங்கா மற்றும் தொகுப்பாளினி பிரியங்கா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..