டாஸ்குக்காக எல்லைமீறி போகும் நிரூப்.. கொந்தளித்த மற்ற போட்டியாளர்கள்
பிக் பாஸ் 5 ஷோ இன்று 94வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது பணப்பெட்டியை வீட்டுக்குள் அனுப்பி அதை யாராவது எடுத்துக்கொண்டு வெளியில் போறீங்களா என பிக் பாஸ் கேட்டு வருகிறார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை. அது முதலிரண்டு ப்ரொமோ வீடியோக்களில் காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது மூன்றாம் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் Dare or Sacrifice என இரண்டு போன் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
முதலில் வரும் போன் காலில் உப்பு, சக்கரை, வெங்காயம் ஆகியவற்றை sacrifice செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. அதனால் நிரூப் உடனே அதை எடுத்து ஸ்டோர் ரூமில் வைக்கிறார். அடுத்து உன் முடியை கொடுக்கவேண்டும் என கால் வந்தால் என்ன செய்வாய் என தாமரை கோபத்துடன் கேட்கிறார்.
மேலும் மற்ற போட்டியாளர்களும் நிரூப்பீடம் சண்டை போடுகின்றனர். உப்பு, சக்கரை மற்றும் வெங்காயம் இல்லாமல் தான் சமைக்க வேண்டும் என பிக் பாஸ் கூறிவிட அமீர், பிரியங்கா ஆகியோர் நிரூப்பிடம் சண்டை போடுகின்றனர்.
வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாமல் தான் பிக் பாஸில் வந்து இருக்கிறோம் என பிரியங்கா கோபத்துடன் கூறி உள்ளார்.
#Day94 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/Eg9s5SkMiK
— Vijay Television (@vijaytelevision) January 5, 2022