மூன்று திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ள நடிகை பிரியங்கா மோகன் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிரியங்கா மோகன்
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன் மூன்று திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.
அடுத்ததாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே போல் ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பிரியங்கா தான் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
பிரியங்கா மோகனின் சம்பளம்
இந்நிலையில் கோலிவுட் திரையுலகின் பிசியாக கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை பிரியங்கா மோகன் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.