96 திரிஷாவாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா ! ரசிகர்களை கவர்ந்த அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்..
விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தற்போது பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராகவும் பிரியங்கா ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பிரியங்கா அவரின் ட்விட்டர் 96 பட ஜானு போன்ற கெட்டப்பில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
மேலும் ஒரிஜினல் ஜானுவான நடிகை திரிஷாவும் பிரியங்காவின் புகைப்படத்திற்கு " ஹாஹாஹா Love" கமெண்ட் செய்துள்ளார்.
JAANUU?? pic.twitter.com/gQ4SezBnc0
— Priyanka Deshpande (@Priyanka2804) February 19, 2022