படப்பிடிப்பில் விபத்து! படுகாயம் அடைந்த நடிகை பிரியங்கா சோப்ரா.. ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதன்பின், பாலிவுட் மூலம் பிரபலமாகி தற்போது ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக விளங்கி வரும் பிரியங்கா சோப்ரா, திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
மேலும், பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பின் போது, நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால், பிரியங்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானார்கள்.
ஆனால், தனக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை. கன்னத்தில் சிறிதான காயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் ரசிகர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
