அதிகம் Politics பண்றாங்க.. இந்தியாவை விட்டு கிளம்பிட்டேன்: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி

By Parthiban.A Mar 28, 2023 09:30 AM GMT
Report

நடிகை ப்ரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இந்திய சினிமாவை விட்டு வெளியேறியதன் காரணத்தை கூறி ஷாக் கொடுத்து இருக்கிறார். 

பிரியங்கா சோப்ரா

விஜய்யின் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் ஹிந்தி சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வளர்ந்தார் அவர்.

ஹிந்தி சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்த அவர் ஒரு கட்டத்தில் ஹாலிவுட்டிலும் களமிறங்கி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

நிக் ஜோனஸ் என்பவரை 2018ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன அவர் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

அதிகம் Politics பண்றாங்க.. இந்தியாவை விட்டு கிளம்பிட்டேன்: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி | Priyanka Chopra On Politics In Bollywood

இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன்?

இந்நிலையில் Armchair Expert Podcastல் பேசிய பிரியங்கா சோப்ரா தான் இந்தியாவைவிட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆக என்ன காரணம் என கூறி இருக்கிறார்.

"பாலிவுட்டில் அதிகம் politics இருக்கிறது. என்னை தொடர்ந்து கார்னர் செய்தார்கள். யாரும் என்னை படத்தில் cast செய்யவில்லை. பலருடன் பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த கேம் எனக்கு பிடிக்கவில்லை, இந்த politics எனக்கு சோர்வை ஏற்படுத்தியது. அதனால் நான் பிரேக் எடுக்க விரும்பினேன்."

அதிகம் Politics பண்றாங்க.. இந்தியாவை விட்டு கிளம்பிட்டேன்: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி | Priyanka Chopra On Politics In Bollywood

"அந்த நேரத்தில் ஹாலிவுட்டில் இருந்து மியூசிக் வாய்ப்பு வந்தது. அதை உடனே ஏற்றுக்கொண்டு இந்தியாவை விட்டே வந்துவிட்டேன். நான் பாலிவுட்டை விட்டு வெளியேற வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் தான் சரியாக அந்த வாய்ப்பு வந்தது" என பிரியங்கா கூறி இருக்கிறார்.

பிரியங்காவின் பேட்டி தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US