இந்திய நடிகர்களை அந்த விஷயத்தில் தூக்கி சாப்பிட்ட பிரியங்கா சோப்ரா.. எதில் தெரியுமா
பிரியங்கா சோப்ரா
தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் இதன்பின் தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்ட வில்லை.
இதன்பின் முழுமையாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா சோப்ரா பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். பாலிவுட் மட்டுமின்றி தொடர்ந்து ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்த பிரியங்கா நல்லநல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப் தொடரின் இந்திய பதிப்பில் தான் சமந்தா நடித்து வருகிறார்.
சம்பளம்
இந்நிலையில் உலகளவில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ராவின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்த்திருந்தோம்.
அதை தொடர்ந்து தற்போது அவர் வாங்கும் சம்பளம் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகை பிரியங்கா சோப்ரா ரூ. 15 முதல் ரூ. 40 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் உள்ள பல முன்னணி நடிகர்களை சம்பள பட்டியலில் தூக்கி சாப்பிவிட்டார் பிரியங்கா. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த நபரை டேட்டிங் செய்து வரும் காயத்ரி!.. காதலை உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu
