குண்டாகி ஆளே மாறிப்போன பிரியங்கா சோப்ரா! போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது உலக அளவில் பாப்புலரான பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஒரு போட்டோ வந்தால் கூட அது இணையத்தில் வைரல் ஆகி விடுகிறது.
சமீபத்தில் பிரியங்கா - நிக் ஜோடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் குழந்தை பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் ஷாப்பிங்கிற்காக வெளியில் வந்திருக்கிறார். அந்த போட்டோவை ஒரு பத்திரிகையாளர் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிரியங்கா சற்று குண்டாகி இருப்பதை சில விமர்சித்து வருகின்றனர். வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகள் எங்கே எனவும் சிலர் கேள்வி கேட்டிருக்கின்றனர்.
வாடகை தாய் மூலம் பெற்றாலும் பிரியங்காவும் தற்போது அம்மாவாக தான் வாழ்ந்து வருகிறார். அதனால் தான் இந்த மாற்றம் என பிரியங்காவுக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் சிலர் பேசி வருகின்றனர்.

