ராஜமௌலியின் வாரணாசி படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ள சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
பிரியங்கா சோப்ரா
தமிழில் அறிமுகமாகி பின் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, இன்று ஹாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்த ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இரண்டு ஹாலிவுட் படம் மற்றும் ஒரு இந்திய திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அந்த இந்திய திரைப்படம்தான் ராஜமௌலியின் வாரணாசி.
வாரணாசி
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் வாரணாசி படத்தின் தலைப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது. மந்தாகினி என்கிற கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக மகேஷ் பாபு, பிரித்விராஜ் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். சமீபத்தில் இவருடைய போஸ்டர் கூட படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

சம்பளம்
இந்த நிலையில், வாரணாசி படத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக பிரியங்கா ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற சாதனையை படைத்துள்ளார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri