வசியை மறுமணம் செய்ததே அதற்காக தானா?.. ஓபனாக பேசிய தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே என்றதும் மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது அவரின் கலகலப்பான சிரிப்பு தான்.
எந்த ஒரு ஷோ கொடுத்தாலும் தனது ஸ்டைலில் மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார்.
விஜய் தொலைக்காட்சிக்கு என்ட்ரி கொடுத்தவர் சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, விருது நிகழ்ச்சிகள் என பல தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

மறுமணம்
தொகுப்பாளினி பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2025, கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி பிரியங்காவிற்கு வசி என்பவருடன் மறுமணம் நடந்தது. என்னது திருமணம் நடந்துவிட்டதா என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள்.

இன்னொரு பக்கம் பிரியங்கா, வசி என்பவரை மறுமணம் செய்த காரணம் அவர் பணக்காரர், அதனால் தான் திருமணம் என பேசப்பட்டதாம்.
இதுகுறித்து பிரியங்கா ஒரு பேட்டியில், திருமணம் முடிந்த பிறகு சில யூடியூப்களில், எனது கணவர் தீவு வாங்கியுள்ளார், ரூ. 200 கோடி சொத்து இருக்கு, அரசியல் குடும்பம் என என்னென்னவோ கூறினார்.

எனது கணவர் வசி ஒரு இலங்கைத் தமிழர், அவர் குடும்பம் லண்டனில் உள்ளனர். அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவ்வளவுதான்.
பணத்துக்காக கல்யாணம் என்கிறார்கள், நான் இத்தனை வருஷம் உழைச்சிருக்கேன், என்னிடம் பணம் இருக்காதா? என பேசியுள்ளார்.